புதுடெல்லி,அக்.16:இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய அச்சுறுத்தலாக சீனாவும், பாகிஸ்தானும் விளங்குவதாக இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கெ.சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரும் ஆதரவு கிடைக்கிறது. அந்நாட்டின் உள்துறை கட்டமைப்பு அவ்வளவு நல்லதல்ல. இது இந்தியாவை பாதிக்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் நிலைப்பெற்றிருக்கும் காலமெல்லாம் இந்தியாவிற்கு கவலைதான் என இந்திய ராணுவத்தின் பங்கு மற்றும் குறிக்கோள் பணியைக் குறித்த கருத்தரங்கில் வி.கே.சிங் தெரிவித்தார்.
சீனாவுடன் இந்தியாவிற்கு எல்லை ரீதியான தர்க்கம் நிலவியபொழுதும் பல்வேறு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை கட்டி உயர்த்தி வருகிறோம் என வி.கே.சிங் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சீனாவும்,பாகிஸ்தானும் இந்தியாவிற்கு முக்கிய அச்சுறுத்தல் -ராணுவ தளபதி"
கருத்துரையிடுக