16 அக்., 2010

தனிப்பட்ட உரையாடலில் ஜாதிப் பெயரைக் கூறி அழைப்பது தவறல்ல - டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு

புதுடெல்லி,அக்.16:தனிப்பட்ட ரீதியிலான உரையாடலின் போது தலித் சமூகத்தைச் சார்ந்தவரை ஜாதிப் பெயரைக் கூறி அழைப்பது தவறல்ல என டெல்லியிலுள்ள நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஆசிரியரை பள்ளிக்கூட முதல்வர் ஜாதிப் பெயரைக் கூறி அழைத்தார் என குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் இத்தகையதொரு தீர்ப்பைக்கூறி பள்ளிக்கூட முதல்வரை குற்றமற்றவராக ஆக்கினார் அடிசனல் செசன்ஸ் நீதிபதி தர்மேஷ் சர்மா.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க இதுப்போன்ற சம்பவங்கள் பகிரங்கமாக நடைபெறவேண்டும் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கூட முதல்வரும், ஆசிரியரும் மட்டும் தனியாக இருந்த சூழலில் ஜாதிப் பெயரைக் கூறி அழைத்த சம்பவத்திற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிச் சட்டத்தின் 3(1) பிரிவின் படி அவமானப்படுத்தியதாக, அவமதித்ததாகவோ கருதமுடியாது என நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தனிப்பட்ட உரையாடலில் ஜாதிப் பெயரைக் கூறி அழைப்பது தவறல்ல - டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு"

கருத்துரையிடுக