புதுடெல்லி,அக்.16:எதேச்சையாகவோ, மனப்பூர்வமாக இல்லாமலோ நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருத இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதித்துறையின் கட்டமைப்பிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்லாத இத்தகைய செயல்பாட்டை நீதிமன்ற அவமதிப்பாக கருத இயலாது என நீதிபதிகளான ஜெ.எம்.பஞ்சல், ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் துணைப்பதிவாளர் தினேஷ் குமார் குப்தாவிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ரத்துச்செய்துக் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மோட்டார் வாகனவிபத்து தீர்ப்பாய நீதிபதி எஸ்.கெ.பன்சலுக்கு எதிராக விசாரணையை முறியடிக்க துணைப்பதிவாளார் தினேஷ்குமார் முயன்றார் எனக் குற்றஞ்சாட்டி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்தார் குப்தா. உயர்நீதிமன்ற உத்தரவு வந்த காலத்தில் குப்தா துணை பதிவாளராக இல்லை எனவும், நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் துணை பதிவாளராக பதவியேற்றார் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மனப்பூர்வமாக இல்லாமல் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காதது நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியாது - உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக