இஸ்லாமாபாத்,அக்.16:பாகிஸ்தானில் அந்நாட்டு அரசும், உச்சநீதிமன்றமும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன. சில நீதிபதிகளை அரசு பணியிலிருந்து நீக்கப் அரசு தயாராகி வருகிறது என்ற செய்திதான் இந்த மோதலுக்கு வழி வகுத்தது.அரசு அத்தகையதொரு முயற்சியை மேற்கொண்டால் அதனை நாசவேலையாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இஃப்திகார் சவ்தரியின் தலைமையிலான 17 உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்ச் ஏகமனதாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பத்திரிகைகளில் வந்த செய்தியைத் தொடர்ந்து நீதிமன்றம் சுயமாகவே இவ்விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது. பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி உள்ளிட்ட 8 ஆயிரம் பேருக்கு ஊழல் வழக்கில் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான உத்தரவை ரத்துச்செய்த நடவடிக்கையத் தொடர்ந்துதான் சில நீதிபதிகளை பணியிலிருந்து நீக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசு தயாராகி வருவதாக செய்தி வெளியானது.
ஆனால் இச்செய்தி அடிப்படையற்றது என பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி நேற்று முன்தினம் தெளிவுப்படுத்தினார். ஆனால், தங்களுக்கு கிடைத்த தகவலின் படி இது சரியானச் செய்தி என தலைமை நீதிபதி சவ்தரி தெரிவித்தார்.
இதனைக் குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட தலைமை நீதிபதி இஃப்திகார் சவ்தரி உள்ளிட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட உத்தரவை வாபஸ்பெற பாகிஸ்தான் அரசு தயாராகி வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இச்செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் அவசரமாக கூடி ஆலோசித்தனர். இக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி இச்செய்தியைக் குறித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சவ்தரி அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.
ஆனால்,பிரதமர் தற்பொழுது வேறு வேலையில் மும்முரமாக இருப்பதாகவும், கால அவகாசம் தேவை எனவும் அட்டர்னி ஜெனரல் அன்வாருல் ஹக்கின் கோரிக்கையை அங்கீகரித்த நீதிமன்றம் வருகிற 19-ஆம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் உச்சநீதிமன்றமும் அரசும் நேரடி மோதலில்"
கருத்துரையிடுக