11 அக்., 2010

ஹிஜாபிற்கு தடை:கொஸோவாவில் கடும் எதிர்ப்பு

ப்ரஸ்டினா,அக்.11:கொஸோவா 90 சதவீதம் அல்பேனிய வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம்களை தன்னகத்தே கொண்ட நாடு. 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்நாட்டில் வசிக்கின்றனர்.

பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாகயிருந்த பொழுதும் மேற்கத்திய ஆதரவுப்பெற்ற பொம்மை ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் சின்னங்களை தடைச்செய்தும், அம்மக்களை அடக்கி ஒடுக்கியும் வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை அணிந்துவரக் கூடாது என அதிகாரிகள் தடை விதித்தனர். நேற்று முன்தினம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்துவந்தார். இவரை பள்ளியிலிருந்து வெளியேற்றியது பள்ளி நிர்வாகம்.

இதனைத் தொடர்ந்து கொஸோவாவில் அரசு அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான கொஸோவா முஸ்லிம்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொஸோவாவின் அரசியல் சட்ட மதசுதந்திரத்திற்கு உரிமை அளிக்கிறது எனவும், ஆனால், ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் கலாச்சார சின்னங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கின்றனர் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கொஸோவா அரசு பாரபட்சபோக்கை கைவிட அவர்கள் வலியுறுத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஜாபிற்கு தடை:கொஸோவாவில் கடும் எதிர்ப்பு"

கருத்துரையிடுக