12 அக்., 2010

நாசிப்படையின் சீருடையில் குடியரசுக்கட்சி வேட்பாளர் -அமெரிக்காவில் சர்ச்சை

வாஷிங்டன்,அக்.12:நாசிப் படையினரின் சீருடையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரின் புகைப்படம் இணயதளத்தில் வெளியானது அமெரிக்காவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஹிட்லரின் தாக்குதல் படையான ஷூட்ஸ்டாஃபலின் சீருடையை அணிந்த குடியரசுக்கட்சி வேட்பாளர் ரிச் லோட்டின் ஏராளமான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின.

ஓஹியாவில் பிரதிநிதி சபையின் வேட்பாளராக போட்டியிடும் ரிச் லோட்டினிடமிருந்து இடைவெளியை கடைப்பிடிக்க குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியமேற்கு அமெரிக்காவின் வைக்கிங் என்ற அமைப்பினரின் இணையதளத்தில்தான் இந்த புகைப்படம் முதலில் வெளியானது. தான் அதில் ஒரு உறுப்பினர் என்றும், அமெரிக்க ராணுவத்தின் எவரையும் அவமானப்படுத்தியதாக அதற்கு பொருள் இல்லை எனவும் ரிச் லோட் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாசிப்படையின் சீருடையில் குடியரசுக்கட்சி வேட்பாளர் -அமெரிக்காவில் சர்ச்சை"

கருத்துரையிடுக