காபூல்,அக்.12:ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் அதிகாரப்பூர்வ மற்ற பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாயி ஒப்புக்கொண்டுள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் இதனை வெளியிட்டுள்ளார் கர்ஸாயி. அமைதிக்கான உயர்கமிட்டி உருவானபிறகு இத்தகவலை வெளியிட்டுள்ளார் அவர்.
இதுக் குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது: "தாலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தாலிபான்களும் இந்த தேசத்தின் குடிமக்கள்தான் என்ற நிலையில் பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. ஆனால் குறிப்பிட்ட காரியங்களைக் குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை ஒன்று இதுவரை நடைப்பெறவில்லை. ஆனால், அல்காயிதாவுடனான போராட்டம் தொடரும்.
நான் மனோநோயால் பாதிக்கப்படவில்லை. வைட்டமின் மாத்திரைகளைத் தவிர வேறு எந்த மருந்துகளையும் நான் உட்கொள்ளவில்லை." இவ்வாறு கர்ஸாயி கூறினார்.
தாலிபானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளெல்லாம் தோல்வியை தழுவியிருந்தன. முதலில் அந்நிய ஆக்கிரமிப்பு படைகள் ஆஃப்கானை விட்டு வெளியேற வேண்டும் என தாலிபான்கள் நிபந்தனை விதித்ததே இதற்கு காரணமாகும்.
அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிரான தாக்குதல் ஆஃப்கானில் சமீபத்தில் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கர்ஸாயி தகவல்"
கருத்துரையிடுக