12 அக்., 2010

சர்ச்சைக்குரிய மசோதா:இஸ்ரேலின் நடவடிக்கை பாசிசம் என பிரமுகர்கள் அறிக்கை

டெல்அவீவ்,அக்.12:யூதர்கள் அல்லாதோர் இஸ்ரேலை யூத நாடாக அங்கீகரிக்கக் கோரும் மசோதாவிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகரித்ததற்கு இஸ்ரேலில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேல் பாசிசத்தை நோக்கி நகர்வதாக டெல் அவீவில் போராட்டத்தில் கலந்துக் கொண்ட புத்திஜீவிகளும், கலைஞர்களும் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய இம்மசோதாவிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்த உடனேயே நூற்றுக்கணக்கானோர் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களான தோவ் ஹெனின், நில்ஸான் ஹொராவிட்ஸ், டேனியல் பென்சிமன், ஈட்டன் காபெல் ஆகியோரும் இந்த கண்டனப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மிகவும் கவலைக்குரிய சூழல் இது என்றும், இஸ்ரேல் பைத்தேநியூ கட்சியின் பாசிச நிலைப்பாடுகளை அங்கீகரிக்கும் பணியாளாக இஸ்ரேல் அமைச்சரவை மாறிவிட்டது எனவும் இஸ்ரேலின் அரபு பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மத் திபி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொள்கையை அங்கீகரிப்பதற்கு குடிமக்களை நிர்பந்தப்படுத்துவது எந்த நாடும் மேற்கொள்ளாதது. சம உரிமைகளுக்கு இஸ்ரேலில் இடமில்லை என்பது இதன்மூலம் உறுதியானதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகத்திலிருந்து பாசிசத்தை நோக்கி நாடு சென்றுக் கொண்டிருப்பதாக எரட்ஸ் என்றழைக்கப்படும் இஸ்ரேலிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் நடந்த கண்டனப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்திய பேராசிரியர் யாரூன் எஸ்ராச்சி தெரிவித்துள்ளார்.

மக்களின் விருப்பத்தை முற்றிலும் புறக்கணித்துக் கொண்டுவரும் புதிய சட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாக எழுத்தாளரான யோரம் கனியுக் கூறினார்.

இஸ்ரேலிய அரசியல் உண்மையில் சூனியமானது என்பதை இது நிரூபிப்பதாக எதிர்கட்சியான காதிமாவின் தலைவர் சிபி லிப்னி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்ச்சைக்குரிய மசோதா:இஸ்ரேலின் நடவடிக்கை பாசிசம் என பிரமுகர்கள் அறிக்கை"

கருத்துரையிடுக