கர்நாடகா மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பா.ஜ.க அரசு தற்பொழுது பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவை இழக்கும் தருவாயில் மிகப்பெரிய குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறது.
இன்னொருபுறம் தனது இஷ்ட தெய்வங்களின் ஆதரவைத்தேடி புறப்பட்டுள்ளார் முதல்வர் எடியூரப்பா. தனது சொந்த மாநில ஹிந்து தெய்வங்களின் மீது நம்பிக்கையிழந்து அண்டை மாநிலமான கேரளாவின் தளிப்பரம்பில் பிரசித்திப்பெற்ற கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்கு சென்றுள்ளார் அவர்.
போகிற போக்கைப் பார்த்தால் எடியூரப்பாவின் ஆட்சியை அவருடைய இஷ்ட தெய்வங்களால் கூட காப்பாற்ற முடியாது என்றே தோன்றுகிறது.
தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அதிகாரமோகம் எவ்வளவு தூரம் பா.ஜ.கவை ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு முதல் உதாரணம் அல்ல. இதற்கு முன்பு பெல்லாரி சகோதரர்களின் கோபத்திற்கு ஆளாகி அவர்களுடைய ஆணவத்திற்கு முன்பு அடிபணிந்தது. அதுமட்டுமல்ல, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியும், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உ.பி உள்ளிட்ட மாநிலங்களின் மாநிலங்களின் பா.ஜ.க ஆட்சியும் அக்கட்சியின் உள்கட்சி பூசலையும், கொள்கையற்ற கட்சி என்பதையும் எடுத்தியம்பின. இது பா.ஜ.க அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டதன் விளைவே கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்.
சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த அமைச்சரவை மறு சீரமைப்பில் பதவி இழந்தவர்களும், பதவி கிடைக்காமல் போனவர்களும் இணைந்துதான் தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்குள் 6 அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கியுள்ளார் எடியூரப்பா. இனி வரும் நாட்கள் எடியூரப்பாவின் தூக்கத்தை கெடுக்கும் என்பது உறுதி.
சுயேட்சைகள் மட்டுமல்ல பா.ஜ.கவைச் சார்ந்த 14 எம்.எல்.ஏக்களும் நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து எடியூரப்பாவின் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் எடியூரப்பாவிற்கும், பா.ஜ.கவுக்கும் கடுமையான சவாலை எழுப்பியுள்ளனர்.
நிலைமையை சீராக்குவதற்கு பா.ஜ.க வின் தேசிய தலைமை வெங்கய்யா நாயுடுவை பெங்களூருக்கு அனுப்பியுள்ளது. நெருக்கடி தற்காலிகமாக தணிய வாய்ப்பிருந்தாலும் அதற்கு பா.ஜ.க அதிக விலையை கொடுக்கவேண்டிவரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கடந்த முறை பெல்லாரி சகோதரர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க வின் தேசிய தலைமை படாதபாடு பட்டது. தற்பொழுது பா.ஜ.கவின் தேசிய தலைமையில் கூட யாரை எப்பொழுது காலை வாரி விடலாம் என்ற சூழல்தான் நிலவுகிறது.
கர்நாடகாவில் விரைவில் பா.ஜ.க வின் ஆட்சி கவிழ்வதே அம்மாநில மக்களுக்கு நலன் பயக்கும். ஏனெனில், ஊழலும், அதிகாரப் போட்டியும் நிறைந்த அரசாக மாறிவிட்டது பா.ஜ.க அரசு. அதுமட்டுமல்ல, எடியூரப்பாவின் ஆட்சி கர்நாடகாவில் சாதாரண மக்களுக்கு எந்தவொரு நிம்மதியையும் தரவில்லை.
சிறுபான்மை-தலித் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கோ அராஜக தாக்குதல்களையும், பாதுகாப்பற்ற சூழலையும்தான் எடியூரப்பா அளித்தார். காவல்துறையோ முற்றிலும் ஒருதலைபட்சமாகவும், அநீதமான முறையிலும் நடந்துக்கொண்டது.
முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக பொய் வழக்குகள் பதிவுச் செய்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் கலவரத்திற்கு ரேட் பேசும் முத்தலிக்குகளோ சர்வசாதாரணமாக கர்நாடகாவில் நடமாடி வருகின்றனர். பசுவதை தடைச்சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. மிகவும் வகுப்பு வெறிக்கொண்ட ஒரு அரசாகவே கர்நாடகாவில் எடியூரப்பாவின் அரசு செயல்பட்டு வருகிறது.
ஆகவே, எவ்வகையிலாவது கர்நாடக மாநில பா.ஜ.க அரசு கவிழ்ந்து விடவேண்டும் என்பதே கர்நாடகாவில் அமைதியை விரும்பும் மக்களின் விருப்பமாகும்.
விமர்சகன்

0 கருத்துகள்: on "கர்நாடகத்தில் நடைபெறும் குதிரை வியாபாரம்"
கருத்துரையிடுக