8 அக்., 2010

அமெரிக்கா மன்னிப்பு கோரியபிறகும் எல்லையை திறக்காத பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,அக்.8:விமானத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்த பொழுதிலும் எல்லையை திறக்கப்படும் தேதி முடிவாகவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டது எதிர்பாராத சம்பவம் என நேற்று முன்தினம் அமெரிக்காவும், நேட்டோவும் வருத்தம் தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து கைபர் பாஸில் தோர்காம் எல்லை உடனடியாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் சூழ்நிலையைக் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், நேரம் வரும்பொழுது தீர்மானம் எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவிக்கிறார்.

ஆஃப்கானிஸ்தானிற்கு நேட்டோ படையினருக்கு தேவையான பொருட்களைக் கொண்டுச்செல்லும் எல்லை வழியை மூடியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நேட்டோ ட்ரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட எரிபொருள் டாங்கர்கள் தீக்கிரையாகின.

பாகிஸ்தானிடமும், கொல்லப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் தங்களது வருத்தத்தை தெரிவிப்பதாக பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் ஆன் பாட்டேர்ஸன் கூறியிருந்தார்.

பாக்.ராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என நேட்டோவின் விமானத்தாக்குதல் திட்டத்தின் இயக்குநர் ப்ரிகேடியர் ஜெனரல் டிம் ஸதாலிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பாகிஸ்தான் எல்லையை மூடியதால் நேட்டோ சரக்குகளைக் கொண்டு செல்வதில் தடை ஏற்படவில்லை என நேட்டோ அதிகாரிகள் கூறுகின்றனர். பாகிஸ்தான் தென்மேற்கு எல்லையான சமன் வழியாகவும், மேற்காசிய நாடுகள் வழியாகவும் தேவையானப் பொருட்கள் அனுப்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சரக்குகளையும் கொண்டுச்செல்லும் தொர்காம் எல்லை நேட்டோவைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்கா மன்னிப்பு கோரியபிறகும் எல்லையை திறக்காத பாகிஸ்தான்"

கருத்துரையிடுக