காபூல்,அக்.8:வடக்கு ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான சிவிலியன்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை மாலையில் தகார் மாகாணத்தில் இத்தாக்குதல் நடைப்பெற்றதாக உள்ளூர் மக்கள் ப்ரஸ் டி.விக்கு தகவல் அளித்துள்ளனர்.
அமெரிக்கா-நேட்டோ ராணுவப்படை இம்மாகாணத்தில் 3 பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தியதாக மாகாண செய்தித் தொடர்பாளர் ஃபாயிஸ் முஹம்மத் தவ்ஹீதி தெரிவிக்கிறார்.
கொல்லப்பட்டவர்களெல்லாம் தாலிபான்களென்றும், மூத்த தலைவர்களும் அதில் உட்படுவர் எனவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிவிலியன்கள் என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஃப்கானில் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்படுவது வழக்கமாகிவிட்டது. போராளிகளைக் கொல்கிறோம் என்றுக் கூறிவிட்டு சிவிலியன்கள் என பின்னர் உறுதிச்செய்யும் ஏராளமான நிகழ்வுகள் ஆஃப்கானில் நடந்தேறியுள்ளன.
இதற்கிடையே, தெற்கு ஆஃப்கானிஸ்தானில் நடந்த போராளிகளின் தாக்குதலில் ஒரு நேட்டோ ராணுவ வீரர் கொல்லப்பட்டார். அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் அமெரிக்கா தாக்குதல்: ஏராளமான அப்பாவி மக்கள் பலி"
கருத்துரையிடுக