8 அக்., 2010

சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்

ரியாத்,அக்.8:சவூதி அரேபிய அரசு பிரகடனப்படுத்தியுள்ள ஆறுமாத கால பொதுமன்னிப்பு என்பது ஹஜ், உம்ரா ஆகிய புனித யாத்திரைகளுக்காக சவூதிக்கு வருகைத்தந்து விசா கால அவகாசம் முடிந்தபிறகு நாட்டிற்கு திரும்பாமலிருப்பவர்களுக்கும், சுற்றுலா(விசிட்) விசாவில் வந்து காலாவதியான பிறகு நாடு திரும்பாதவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொடுமை காரணமாகவும் மற்றும் தற்போதைய ஸ்பான்சரை விட்டு விலகி இதர பணிகளில் ஈடுபட்டோருக்கும் பொதுமன்னிப்பு பொருந்தாது.

மேற்கூறிய மூன்று பிரிவினர், அதாவது ஹஜ், உம்ரா, சுற்றுலா(விசிட்) விசாக்களில் சவூதிக்கு வருகைத்தந்து காலாவதியான பிறகும் நாடு திரும்பாதவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டுகளுடன் தூதரக மையத்தை அணுகினால், நாடு திரும்புவதற்கான பயண ஆவணங்களை சரிச்செய்து அளிப்போம் என இந்திய தூதரக ஜெனரல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திற்கு முன்னால் ஏராளமானோர் கூடினர் இதனைத் தொடர்ந்து இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 ஆம் தேதி மட்டும் நூற்றிற்கும் மேற்பட்டோர் தூதரகத்தை அணுகியுள்ளனர். ரியாதில் பிலிப்பைன்ஸ் தூதரகத்திலும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவர்களின் பெரும்பாலோர் ஸ்பான்சர்களை விட்டு விலகி ஓட்டுநர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் பணியாற்றுபவர்களாவர்.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை இந்த பொதுமன்னிப்பு நடைமுறையிலிருக்கும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்"

கருத்துரையிடுக