4 அக்., 2010

ஒபாமாவின் கொள்கைகளை கண்டித்து அமெரிக்காவில் பிரம்மாண்ட பேரணி

வாஷிங்டன்,அக்.4:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கொள்கைகளை கண்டித்து அமெரிக்காவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இரண்டரை லட்சம் மக்கள் பங்கேற்ற இப்பேரணியின் முக்கிய முழக்கம், "வேலை, நீதி, கல்வி" என்பதாகும்.
வாஷிங்டன் நகரத்தின் லிங்கன் நினைவிடத்தில் இந்த பேரணி நடைபெற்றது. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.

வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக கோடிக்கணக்கான டாலரை போருக்காக செலவழிக்கும் ஒபாமாவின் அரசிற்கெதிராக நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தீர்ப்புக்கூற அமெரிக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கும் விதமாக அமைந்தது இப்பேரணி.

ஏறத்தாழ 400 அமைப்புகள் இப்பேரணியில் பங்கேற்றன. கண்டனப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமாவின் கொள்கைகளை கண்டித்து அமெரிக்காவில் பிரம்மாண்ட பேரணி"

கருத்துரையிடுக