4 அக்., 2010

குவாட்டிமாலா மக்களிடம் மருந்து பரிசோதனைச் செய்த அமெரிக்கா -அதிபர் கண்டனம்

வாஷிங்டன்,அக்.4:குவாட்டிமாலா நாட்டு மக்களிடம் மருந்து பரிசோதனை நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கை மனித இனத்தின் மீது நடத்தப்பட்ட குற்றம் என அந்நாட்டு அதிபர் அல்வாரோ கோளம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1946-48 காலக் கட்டங்களில் குவாட்டிமாலா நாட்டின் சிறைக்கைதிகள் மற்றும் மனநோயாளிகளிடம் நடத்திய மருந்து பரிசோதனை பின்னர் பெரும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தியிருந்தது. சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியில்லாமலே மருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இச்சம்பவத்திற்கு நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருத்தம் தெரிவித்திருந்தார்.

சிஃபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விபச்சாரிகளை பயன்படுத்தி மனிதர்களில் நோயை பரவச்செய்து பின்னர் இன்சுலின் ஊசியைப் போட்டு நோய் குணமாகுமா? என்று அமெரிக்கா பரிசோதனை நடத்தியது. ஆனால் இது பலன் கிடைத்ததா? என்பது உறுதிச் செய்யப்படாததுடன், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை.

இப்பரிசோதனைக் குறித்த விபரங்களை சமீபத்தில் வெல்ஸ்லி கல்லூரி பேராசிரியர் சூசன் ரிவேர்பி வெளிப்படுத்தியிருந்தார். 700 பேரிடம் இப்பரிசோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமாக பரிசோதனை நடத்தியதற்கும், பரிசோதனையால் பாதிக்கப்பட்டவர்களிடமும் தான் வருத்தம் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் பாரக் ஒபாமா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

குவாட்டிமாலா அதிபரை தொலைபேசியில் அழைத்து ஒபாமா இதனை தெரிவித்திருந்தார். இத்துடன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஆரோக்கியத்துறை செயலாளர் காதலின் ஸெபெலியஸ் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா குவாட்டிமாலாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவாட்டிமாலா மக்களிடம் மருந்து பரிசோதனைச் செய்த அமெரிக்கா -அதிபர் கண்டனம்"

கருத்துரையிடுக