மொரினா,அக்.7:தலித் பெண்மணி ஒருவரிடம் உணவு சாப்பிட்ட வளர்ப்பு நாயை தீண்டத்தகாதது என அறிவித்த மேல் ஜாதியினரான 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மாலிக் பூரா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேல் ஜாதிக்காரரான அம்ருத் யாதவின் வளர்ப்பு நாய் தலித் பெண்மணியான சுனிதா யாதவ் அளித்த உணவை சாப்பிட்டது. இதனை அறிந்த அம்ருத் யாதவும் அவருடைய சகோதரர்களும், தீண்டத்தகாதவரின் உணவை சாப்பிட்ட
நாயும் தீண்டத்தகாததுதான் எனக்கூறி அந்த நாயை சுனிதாவின் வீட்டிற்கு முன்னால் கட்டிப் போட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுனிதா மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து அம்ருத் யாதவையும் அவருடைய இரண்டு சகோதரர்களையும் காவல்துறை கைதுச் செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நாயிடம் தீண்டாமை:குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு"
கருத்துரையிடுக