24 அக்., 2010

விக்கீ லீக்ஸ் புதிய இரகசிய ஆவணங்கள் வெளியீடு மூலம் ஈராக் கொடூரங்களின் அதிக விபரங்கள் வெளியாகின்றன

வாஷிங்டன்,அக்.24:ஈராக்கில் நடந்த சிறைக்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த அதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வரலாற்றில் மிக அதிகமான ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக வேடமிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வடக்கு பாக்தாதில் நர்மியா நகரத்தின் செக்போஸ்டிலிருந்து கைதுச் செய்யப்பட்ட ஈராக் குடிமகன் ஒருவரை ஈராக் ராணுவம் சித்திரவதைச் செய்த சம்பவத்தை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கைகளை பின்பக்கமாக கட்டிவிட்டு கவிழ்ந்து கிடத்திய பிறகு அவர்மீது ஈராக் ராணுவத்தைச் சார்ந்த ஒருவன் ஏறிக்குதித்து உடலில் சிறுநீர் கழித்துவிட்டு பின்னர் காரி உமிழ்ந்துள்ளான். நீண்ட நேரம் தொடர்ந்த இந்த சித்திரவதைக் காரணமாக உடல்முழுவதும் காயமேற்பட்டது அவருக்கு. பார்வைக்கோளாறு, காதுக்கேளாமை, காதிலிருந்து இரத்தம் கசிந்தது, நெற்றி, கழுத்து, மார்பு, தோள், கை, கால்கள் உள்ளிட்ட உடலின் பெரும் பகுதிகளிலும் காயங்களும், முறிவுகளும் மருத்துவ பரிசோதனையில் தெளிவுப்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஈராக்கில் சிறைக்கூட சித்திரவதைகள், கஸ்டடி மரணங்கள், குடும்பங்களை அச்சுறுத்துதல், வன்புணர்வு உள்ளிட்ட அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன. இவற்றைக் குறித்து அமெரிக்காவிற்கு தெரிந்த பொழுதிலும் கூட ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திவிட்டு அவற்றை முடித்துவிடுவதிலேயே அமெரிக்கா குறியாக உள்ளது.

ஆனால், இது ஐ.நாவின் சித்திரவதைகளுக்கெதிரான தீர்மானங்களை வெளிப்படையாக மீறுவதாகும். சித்திரவதைகள் நடப்பது தெளிவாக தெரிந்த பிறகும் கூட ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளை அமெரிக்கா ஈராக்கிடம் ஒப்படைத்துள்ளது.

செக்போஸ்டுகளில் அமெரிக்கா நடத்தும் முன்னெச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டில் ஒவ்வொருவருடமும் ஏராளமான ஈராக்கிகள் கொல்லப்படுவதையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

காதுகேளாதோரும், பார்வையிழந்தவர்களும் முன்னெச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டை அறியாமல் செக்போஸ்டுகளை நெருங்கும் பொழுது கொல்லப்பட்ட சம்பவங்களும் ஏராளம் உள்ளன.

மனோநிலை பாதிக்கப்பட்டவர்களும் இச்சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் கொடுமைகளிலிருந்து ஈராக் மக்களை விடுவிப்பதைத்தான் ஈராக் ஆக்கிரமிப்பின் முக்கிய லட்சியம் என அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கீ லீக்ஸ் புதிய இரகசிய ஆவணங்கள் வெளியீடு மூலம் ஈராக் கொடூரங்களின் அதிக விபரங்கள் வெளியாகின்றன"

கருத்துரையிடுக