ரமல்லா,அக்.5:மேற்கு கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மஸ்ஜிதிற்கு தீவைத்து திருக்குர்ஆன் பிரதிகளை தீவைத்துக் கொளுத்தினர்.
மஸ்ஜிதின் விரிப்புகளை குவித்துப்போட்டு தீவைத்த அக்கிரமக்காரர்கள் சுவர்களின் முஸ்லிம் விரோத வார்த்தைகளை எழுதினர் என நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
தெற்கு பெத்லஹமில் பைத் ஃபஜரிலிலுள்ள மஸ்ஜிதில் அதிகாலை தொழுகை நடப்பதற்கு முன்பாக இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மஸ்ஜிதில் அத்துமீறி நுழைந்ததாக மேயர் அஹ்மத் தவாப்த் கூறுகிறார்.
இச்சம்பவத்தை விசாரிக்க போலீஸ் சென்றுள்ளதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் பூமி என உரிமைக்கோரும் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் கடந்த ஆண்டும் மேற்கு கரையில் மஸ்ஜிதிற்கு தீவைத்தனர். மஸ்ஜிதுகளுக்கெதிராக தாக்குதல் நடப்பது இப்பகுதியில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இஸ்ரேலிய அரசு இதனைக் கண்டுக்கொள்வதில்லை என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மஸ்ஜிதிற்கு தீவைத்தனர்"
கருத்துரையிடுக