5 அக்., 2010

உலக முஸ்லிம் இளைஞர் சபையின்(WAMY) மாநாடு இந்தோனேசியாவில் துவங்கியது

ஜகார்த்தா,அக்.5:80 நாடுகளிலிருந்து 700 அறிஞர்கள் பங்கேற்கும் உலக முஸ்லிம் இளைஞர் சபையின் (World Assembly of Muslim Youth) 11-வது சர்வதேச மாநாடு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் துவங்கியது.

ஹோட்டல் சுல்தானில் 3 தினங்கள் நடைபெறும் மாநாட்டை இந்தோனேசியாவின் மதவிவகாரத்துறை அமைச்சர் சூர்யாதர்ம அலி துவக்கி வைத்தார்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஸாலிஹ் அல் அஸீஃஹ், சவூதி அரேபிய அறிஞர்களான ஷேக் அப்துல்லா அல் மானீ, ஷேக் ஸல்மான் அல் ஓதா, முன்னாள் சூடான் மதவிவகாரத்துறை அமைச்சர் ஷேக் அஸ்ஸாம் அல் பஸீர், இஸ்லாமிய பிரச்சாரகர் அம்ர் ஃகாலித் ஆகியோரு ரியாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வாமியின் மாநாட்டில் கலந்துக்கொள்வதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர்.ஸாலிஹ் அல் வொஹய்பி தெரிவித்தார்.

"சமூக முன்னேற்றத்தில் முஸ்லிம் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்குகள், விவாதம், பணிமனை பயிற்சி முகாம் (workshop) ஆகியன நடைபெறும்.

மாநாட்டின் தீர்மானங்கள் வாமி உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுக்கும் அமைப்புகளுக்கு அனுப்பிக் கொடுக்கப்படும் என டாக்டர்.ஸாலிஹ் தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்களின் முன்னேற்றம், கல்வி ஆகியன இவ்வமைப்பின் லட்சியமாகும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தல், மஸ்ஜித் விரிவாக்கம் ஆகியவற்றிற்கும் இவ்வமைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவை பிரகடனப்படுத்திய இந்தோனேசியாவைச் சார்ந்த முஸ்லிம் இளம்பெண்னை பாராட்டினார் டாக்டர்.ஸாலிஹ்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலக முஸ்லிம் இளைஞர் சபையின்(WAMY) மாநாடு இந்தோனேசியாவில் துவங்கியது"

கருத்துரையிடுக