24 அக்., 2010

கஷ்மீர் கருத்தரங்கிற்கெதிராக வழக்கு பதிவுச செய்ய மத்திய அரசு சட்ட ஆலோசனை

புதுடெல்லி,அக்.24:கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கக்கோரி டெல்லியில் நடத்தப்பட்ட கருத்தரங்கினை நடத்தியவர்கள் மீது வழக்குத்தொடர மத்திய அரசு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துள்ளது.

கமிட்டி ஆஃப் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் என்ற அமைப்பு டெல்லியில் வைத்து நடத்திய கருத்தரங்கில் கஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், டெல்லி, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் பலர் உரையாற்றினர்.

கஷ்மீரைக் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்த சர்ச்சைக்குரிய பகுதி என்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென்பதுதான் இக்கருத்தரங்கில் அனைவரும் எழுப்பிய பொதுவான கோரிக்கையாகும்.

கஷ்மீருக்கு சுதந்திரமும் தேவை என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டன. ஆனால், கருத்தரங்கிற்கெதிராக பா.ஜ.க கிளம்பியவுடனேயே மத்திய அரசும் வழக்குப் போடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

கருத்தரங்கை அலங்கோலப்படுத்த பா.ஜ.கவின் கைக்கூலிகள் ரகளை ஏற்படுத்தினர். கருத்தரங்கின் உரைத் தொடர்பான வீடியோக் காட்சிகளை பார்வையிட்டு போதிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி போலீஸிற்கு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை எனவும், கறுப்புச் சட்டங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இவ்விவகாரத்தை விரிவாக விவாதிக்கவேண்டும் என முன்னாள் முக்கிய தகவல் உரிமை கமிஷனர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்தார்.

கஷ்மீர் ஏராளமான பிரச்சனைகளைக் கொண்ட தர்க்க பிரதேசமாக இருக்கையில், இத்தகையதொரு பேச்சுவார்த்தைகளுக்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என பிரபல வழக்கறிஞரும், மக்கள் உரிமை ஆர்வலருமான பிரசாந்த்பூஷன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளைக் குறித்து பேச மக்களுக்கு உரிமை உண்டு. அருந்ததிராய்க்கு எதிராகவோ, கிலானிக்கு எதிராகவோ வழக்குத் தொடர்ந்தால் அது நிற்காது.

1962 ஆம் ஆண்டு கேதார் நாத் எதிராளி பஞ்சாப் அரசு வழக்கில் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காமலோ, தாக்குதலை நடத்தாமலோ செய்யாமல் இத்தகைய விவாதங்கள் தேசத் துரோகமாக கருதமுடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளதை பிரசாந்த்பூஷன் நினைவுக் கூர்ந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் கருத்தரங்கிற்கெதிராக வழக்கு பதிவுச செய்ய மத்திய அரசு சட்ட ஆலோசனை"

கருத்துரையிடுக