26 அக்., 2010

ஈராக்கில் அல்காயிதா செயல்படுவதாக கூறுவது கட்டுக்கதை

லண்டன்,அக்.26:ஈராக் என்ற சுதந்திர தேசத்தை ஆக்கிரமித்து அங்கிருந்த வரலாற்று மற்றும் நாகரீகத்தின் சின்னங்களை அழித்தொழித்து, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து பல லட்சம்பேரை அகதிகளாக்கிய அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய பயங்கரவாத நாடு, தான் ஈராக்கை ஆக்கிரமித்ததற்கு காரணமாக கூறியது ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் ஏராளமாக இருப்பதாகும்.

பின்னர் இது பொய் என்பது வெட்ட வெளிச்சமான பிறகு, அடுத்த காரணமாக கூறப்பட்டது, ஈராக்கில் அல்காயிதா என்ற இயக்கம் செயல்பட்டு வருகிறது என்பதாகும். ஆனால், இதுவும் பொய் என்பதை சமீபத்தில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

சதாம் ஹுசைனிடமிருந்து ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை அமெரிக்கா கைப்பற்றிய பிறகுதான் ஈராக்கில் அல்காயிதா வேரூன்றியதாக வார்லோக்ஸ் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களிலிருந்து புலனாகிறது.

2002 ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளராகயிருந்த ரெனால்ட் ரம்ஸ்பெல்டுதான் ஈராக்கில் அல்காயிதா செயல்படுவது உண்மை என பிரகடனப்படுத்தினார். ஆனால், இந்த ரம்ஸ்பெல்டின் கூற்று பொய் என்பதை ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ரகசிய ஆவணங்களின் ஆறு பக்கங்களில் இதுத் தொடர்பான விமர்சனங்கள் அடங்கியுள்ளன. அல்காயிதாவுக்கு தலைமை வகிக்கும் உஸாமா பின் லேடனுடன் கடந்த 2004 ஆம் ஆண்டு அபூ மூஸாப் அல் ஸர்காவி சந்தித்து பேசியதாகவும், சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானில் போராடுவதற்குத்தான் அல்காயிதா உருவாக்கப்பட்டதாகவும் ரகசிய ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன.

ஈராக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புதான் அங்கு அல்காயிதாவின் வருகைக்கு காரணமானது என ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன. சதாம் ஹுசைனின் பாத் கட்சி தலைமையில் நடைப்பெற்ற ஈராக் அரசுடன் அல்காயிதாவிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறிவந்த குற்றச்சாட்டுக் குறித்து ஆரம்பம் முதலே அரசியல் வல்லுநர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூட ஈராக்கின் அல்காயிதா உறவுக் குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர் என பிரிட்டன் உளவுத்துறையின் தலைவர் எலிஸா மன்னிங்காம் புல்லர் தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்கில் அல்காயிதா செயல்படுவதாக கூறுவது கட்டுக்கதை"

கருத்துரையிடுக