26 அக்., 2010

பாகிஸ்தான் சூஃபி மையத்தில் நடந்த தாக்குதலில் ஆறுபேர் மரணம்

இஸ்லாமாபாத்,அக்.26:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சூஃபி மையத்தில் நடந்த தாக்குதலில் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

லாகூரிலிருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலிலுள்ள பத்தான் நகரத்தில் அமைந்துள்ள சூஃபி பெரியார் பாபா பரீதின் மையத்தில் நேற்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தாக்குதல் நடைப்பெற்றது. கொல்லப்பட்டவர்களில் ஒரு பெண்மணியும் அடங்குவார் என மாவட்ட ஆட்சி அதிகாரி மஹர் அஸ்லம் ஹயாத் தெரிவிக்கிறார்.

மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சூஃபி மையத்திற்கு வெளியேயுள்ள கடைகள் தகர்ந்தன. ஆனால், 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூஃபி மையத்திற்கு பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.

அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இத்தாக்குதலுக்கு காரணம் என சூஃபி அறிஞர் முஃப்தி முனீபூர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். ஆட்சியாளர்கள் வெளிநாட்டு எஜமானர்களுக்கு சேவை புரிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பு அவர்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

லாகூர் சூஃபி மையத்தில் கடந்த ஜூலையில் நடந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கராச்சியில் இந்த மாதம் ஏழாம் தேதி சூஃபி மையத்தில் நடந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான் சூஃபி மையத்தில் நடந்த தாக்குதலில் ஆறுபேர் மரணம்"

கருத்துரையிடுக