மும்பை,அக்.9:அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) பெரும்பாலும் ஹிந்துத்துவா அமைப்புகளின் பணியாளராக செயல்படுவதாக பிரபல வரலாற்றாய்வாளரான டாக்டர்.உமர் காலிதி தெரிவித்துள்ளார்.
மாசேசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியராக பணியாற்றும் உமர் காலிதி ரிடீஃப் டாட் காம் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
"கடந்த 2003 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சித்துறை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு ராமஜென்மபூமிக் குறித்து அளித்த அறிக்கையானது, அறிவியலுக்கு முரணான, ஹிந்துத்துவா சக்திகளின் வாதத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற வளைத்தெடுத்தது.
இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதின் அடியில் பல வகையிலான புராதனப் பொருட்கள் கலந்திருந்தன. அதுமட்டுமல்ல, விலங்குகளில் எலும்புகளும், பளபளப்பான மண்பாத்திரங்களின் சிதிலங்களும் 12 ஆம் நூற்றாண்டில் அவ்விடத்தில் ஒரு கோயில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கத்தான் பெரும்பாலும் உதவும்.
1944-48 காலக்கட்டத்தில் இந்திய அகழ்வாராய்ச்சித்துறையின் தலைவராகயிருந்த மோர்டிமர் வீலர் பழைய ஹிந்து இதிகாசங்களின் அடிப்படையில் கங்கை சமவெளியில் சோதனை நடத்த அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு உத்தரவிட்டார். மோர்டிமரின் சீடரான பிபிலான் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை பார்த்து சில அகழ்வாய்வுகளை நடத்தியிருந்தார்.
இந்தியாவின் பல்வேறு மதங்களை ஹிந்துமதத்தின் பேனரின் கீழ்க் கொண்டுவந்து ஆய்வு நடத்துவதுதான் இந்திய அகழ்வாராய்ச்சித்துறை அதிகாரிகளின் பாணி.
முஸ்லிம் படையெடுப்பைக் குறித்து ஹிந்துத்துவா சக்திகளின் வாதங்களுக்கு அகழ்வாராய்ச்சித்துறை விஞ்ஞான ரீதியிலான விளக்கம் அளிக்க முயல்வதே வழக்கம்.
2007 ஆம் ஆண்டு உதய்பூரில் மித்தோர்கரில் ராஜபுத்திரியான இளவரசி பத்மினி தற்கொலைச் செய்துக்கொண்ட நாடோடிக் கதைக்கு ஆதாரத்தை உருவாக்க இந்திய அகழ்வாராய்ச்சித்துறை முயற்சி மேற்கொண்டது.
2003 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் கமால் மவ்லா மஸ்ஜிதில் ஹிந்துக்களுக்கு வழிபாடுச் செய்வதற்குரிய வசதிகளை ஏற்பாடுச் செய்தது இந்திய அகழ்வாராய்ச்சித்துறை ஆகும்.
புராதனப் பொருட்கள் பாதுகாப்பு என்ற பெயரில் கைவசப்படுத்தும் முஸ்லிம் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களை ஹிந்துமயமாக்க இந்திய அகழ்வாராய்ச்சித்துறை துணைபோகிறது.
ஹைதரபாத்தில் அமைந்துள்ள சார்மினாரின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த சிலை தற்பொழுது பரிபூரணமான ஹிந்துக் கோயிலாக மாறியுள்ளது.
கோல்கொண்டா கோட்டையில் பல இடங்களிலும் ஹிந்து சிலைகள் உயர்ந்து வருகிறது. புராதனப்பொருள் பாதுகாப்புச் சட்டங்களை பகிரங்கமாக மீறித்தான் இவையெல்லாம் நடைபெறுகிறது.
இந்திய அகழ்வாராய்ச்சித்துறை வெளியிடும் மடக்கோலைகளிலும், அதன் இணையதளத்திலும் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது." இவ்வாறு உமர் காலிதி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்திய அகழ்வாராய்ச்சித்துறை ஹிந்துத்துவா அரசியலுக்கே ஆதரவு அளிக்கிறது"
கருத்துரையிடுக