கராச்சி,நவ.12:பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரான கராச்சியில் சிந்து மாகாண முதல்வர் வசிக்கும் அதிகாரப்பூர்வ அரசு மாளிகைக்கு அருகில் நடந்த பெரிய குண்டுவெடிப்பில் 15 கொல்லப்பட்டுள்ளனர். 50 பேருக்கு காயமேற்பட்டது.
சி.ஐ.டி உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில்தான் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பில் சி.ஐ.டி. அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
லஷ்கர்-இ-ஜாங்க்வி என்ற அமைப்பின் உறுப்பினர்களை சமீபத்தில் சி.ஐ.டி கைதுச் செய்திருந்தது. தாக்குதலில் பொறுப்பை பாகிஸ்தான் தாலிபான் ஏற்றுக்கொண்டதாக ஜியோ நியூஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கராச்சியில் குண்டுவெடிப்பு:15 பேர் மரணம்"
கருத்துரையிடுக