12 நவ., 2010

பாகிஸ்தானில் ஆண்டிற்கு மென்று துப்பப்படும் வெற்றிலைப் பாக்கின் மதிப்பு 6.47 கோடி டாலர்

இஸ்லாமாபாத்,நவ.12:பாகிஸ்தானிகள் வருடத்திற்கு மென்று துப்பும் வெற்றிலை பாக்கின் மதிப்பு 6.47.கோடி டாலர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு தொகையின் மதிப்புடைய வெற்றிலையும், பாக்கும் இறக்குமதிச் செய்யபடுவதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அவையில் பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் மக்தூம் அமீன் ஃபாஹிம் சமர்ப்பித்த அறிக்கையில், பல்வேறு நாடுகளிலிலிருந்து 5.9 கோடி டாலர் மதிப்பிலான பாக்கும், 57 லட்சம் டாலர் மதிப்பிலான வெற்றிலையும் இறக்குமதிச் செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்.

இந்தியா, மலேசியா,மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து பாக்கு இறக்குமதிச் செய்யப்படுகிறது. வெற்றிலை ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், மத்திய ஆப்ரிக்க நாடுகள், சீனா, ஹாங்காங், இலங்கை, தாய்லாந்து, யு.ஏ.இ ஆகிய இடங்களிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுவதாக டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் இந்தப் பொருட்களை ஏன் இறக்குமதிச் செய்து இவ்வளவு தொகையை வீணாக்குகின்றீர்கள்? என சபாநாயகர் ஃபஹ்மிதா மிர்ஸா கேள்வி எழுப்பினார். இவற்றின் இறக்குமதியும், உபயோகமும் குறைப்பதற்கு அதிக வரி விதிக்கவேண்டும் என மிர்ஸா கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நாட்டில் வெற்றிலை பாக்கிற்கு தேவையுடையோர் அதிகமாக உள்ள சூழலில் அவற்றிற்கு அதிக வரியை விதிப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கும் என பதிலளித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் ஆண்டிற்கு மென்று துப்பப்படும் வெற்றிலைப் பாக்கின் மதிப்பு 6.47 கோடி டாலர்"

கருத்துரையிடுக