12 நவ., 2010

ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலைச் செய்யும் வீடியோ கேமிற்கெதிராக கியூபா

ஹவானா,நவ.12:ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கியூபாவின் 84 வயது கம்யூனிச தலைவர்.

50 ஆண்டுகள் கியூபாவின் அதிபராக பதவி வகித்துள்ளார் அவர். காஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்கா 600க்கும் மேற்பட்ட தடவை முயற்சியை மேற்கொண்டது. ஆனால் அனைத்திலும் அமெரிக்காவிற்கு தோல்வியே மிஞ்சியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, போர்க்களத்தில் தோல்வியைத் தழுவினால், ஹாலிவுட்டில் அதுத்தொடர்பான திரைப்படத்தை தயாரித்து அதில் அமெரிக்கா வெற்றிப்பெறுவதாக காட்டி அமெரிக்க மக்களை ஆசுவாசப்படுத்துவது வழக்கம்.

கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாத சூழலில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ கேம் ஒன்றில் ஃபிடல் காஸ்ட்ரோ கொல்லப்படுகிறார்.

பனிப்போர் காலத்தில் ரகசியமான நடவடிக்கையை கால் ஆஃப் டூட்டி, ப்ளாக் ஆப்ஸ் என்ற கேமில் அறிமுகப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட சிறப்புப்படை இளைஞரான ஃபிடல் காஸ்ட்ரோவை கொலைச் செய்யும் காட்சி அதாவது கியூபாவின் ஹவானா நகரத்தின் வீதியில் புரட்சி வீரரான ஃபிடல் காஸ்ட்ரோவை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுதான் கேம்.

இதனை கியூபாவின் கியூபா டிபேட் என்ற இணையதளம் கண்டித்துள்ளது. விளையாட்டின் பெயரால் பிஞ்சுகளின் மனதில் குரோதத்தை ஏற்படுத்தும் மோசமான முயற்சி இது என அந்த இணையதளம் குற்றஞ்சாட்டியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலைச் செய்யும் வீடியோ கேமிற்கெதிராக கியூபா"

கருத்துரையிடுக