சூரி(மேற்குவங்காளம்),நவ.12:பிர்பம் மாவட்டத்தில் சுச்சூர் கிராமத்தில் 11 திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை படுகொலைச் செய்த வழக்கில் 44 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2000 ஆம் ஆண்டில்தான் இந்த கூட்டுப் படுகொலை நடந்தேறியது. கொல்லப்பட்டவர்கள் நிலமற்ற விவசாயிகளாவர். கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி பிஸ்வநாத் கோனார் இத்தண்டனையை விதித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மாவட்ட முன்னாள் சி.பி.எம் பரிஷத் உறுப்பினர் நித்ய நாராயணன் சாட்டர்ஜி, சி.பி.எம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் ராமபிரசாத் கோஷ் ஆகியோர் அடங்குவர். 23 பேர்கள் விடுவிக்கப்பட்டனர். ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர். ஐந்து பேர் விசாரணையின்போது மரணித்துவிட்டனர்.
கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்தது சாட்டர்ஜி என வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருந்தது. வெட்டப்பட்டும், தாக்கியும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களான விவசாயிகள் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 87 பேரில் 82 பேர் சி.பி.எம் தொண்டர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டுப் படுகொலை: 44 சி.பி.எம் தொண்டர்களுக்கு ஆயுள்"
கருத்துரையிடுக