6 நவ., 2010

அமெரிக்க நிறுவனம் 20 மாநிலங்களில் சர்வே நடத்தியதாக புலனாய்வில் தகவல்

திருவனந்தபுரம்,நவ.6:முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளை மையமாகக்கொண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று மேற்கொண்ட சர்வே 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடத்தப்பட்டதாக புலனாய்வில் தெரியவந்துள்ளது.

அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லவோ, அனுமதியோ பெறாமலேயே இந்தியாவை 13 பகுதிகளாக பிரித்து 55 மையங்களில் சர்வே நடத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் 12 மாநிலங்களிலும், தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வே நடத்தப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 15 நகரங்களில் கள மையங்களை மையமாகக் கொண்டு டி.என்.எஸ் இந்தியா என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் சர்வேயை மேற்கொண்டுள்ளது.

டெல்லி,மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அஹ்மதாபாத், லக்னோ, பாட்னா, புனே, மதுரை, நாக்பூர், பெங்களூர், கொச்சி, லூதியானா, புவனேஷ்வர் ஆகிய நகரங்களை ஃபீல்டு செண்டர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

நகரங்கள் மற்றும் கிராமங்களையும் முக்கியமாக கவனத்தில் கொண்டு நடத்தப்பட்ட சர்வேயில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து விபரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். எல்லா இடங்களிலுமே முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளை மையமாகக் கொண்டுதான் சர்வே நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், வட இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் குஜராத் தவிர்க்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அட்டக்குளங்கரை பகுதியிலுள்ள கரிமடம் என்ற இடத்தில் மட்டுமே சர்வே நடத்தப்பட்டதாக கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட டி.என்.எஸ் இந்தியா மார்கெட்டிங் நிறுவனத்தின் பணியாளர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதி என்பதால் கரிமடம் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது. அஜ்மீர், முர்ஷிதாபாத், மீரட், சூரத், கான்பூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரங்களிலும் சர்வே நடத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் 130 பேர்களிடமிருந்து விபரங்களை சேகரிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், சர்வேயின் துவக்கத்திலேயே உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதனை தடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம் மட்டுமின்றி கன்னியாகுமரியில் 100 பேர்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நகரத்தில் 100 பேர்களிடமும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 270 பேரிடமும் சர்வே நடத்தப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க நிறுவனம் 20 மாநிலங்களில் சர்வே நடத்தியதாக புலனாய்வில் தகவல்"

கருத்துரையிடுக