9 நவ., 2010

ஈராக்:கர்பலா மற்றும் நஜஃபில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் மரணம்

பாக்தாத்,நவ.9:ஈராக்கில் ஷியா புண்ணிய ஸ்தலங்களான கர்பலா மற்றும் நஜஃபில் நடந்த கார் குண்டுவெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

கர்பலாவில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். 40 பேருக்கு காயமேற்பட்டுள்ளது என போலீஸ் தெரிவிக்கிறது.

ஈரான் நாட்டைச் சார்ந்த புனித யாத்ரீகர்கள் பயணித்த பஸ்ஸை குறிவைத்து இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. பிரபல அரசியல் தலைவர்கள் புதிதாக உருவாக்குவதுக் குறித்து குர்து பகுதியான இர்பிலிலில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூடிய வேளையில்தான் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.

கர்பலாவில் இமாம் ஹுசைன்(ரலி...) அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. கொல்லப்பட்டவர்களில் ஈரானைச் சார்ந்த புனித யாத்ரீகர்களும் அடங்குவர். தாக்குதலில் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

நஜஃபில் நடந்த தாக்குதலில் எட்டுபேர் மரணித்துள்ளனர். இமாம் அலீ(ரலி...) அடக்கஸ்தலத்திற்கு 500 அடி தொலைவில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று ஈரான் புனித யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 16 பேருக்கு காயமேற்பட்டது.

புனித யாத்ரீகர்கள் பயணித்த 3 பஸ்களுக்கு அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாக்தாதில் கடந்த வாரம் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் 120 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்:கர்பலா மற்றும் நஜஃபில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் மரணம்"

கருத்துரையிடுக