18 நவ., 2010

பாகிஸ்தானில் அமெரிக்க தாக்குதல்:20 பேர் மரணம்

இஸ்லாமாபாத்,நவ.18:வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய அக்கிரமத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கான் எல்லையையொட்டிய வடக்கு வஸீரிஸ்தானில் குலாம்கான் மாவட்டத்தில்தான் இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. வீடு மற்றும் வாகனத்தின் மீது ஏவுகணைகள் தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் போராளிகள் என உளவுத்துறை அதிகாரியொருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து ஆப்கான் எல்லையை கடக்க முயலும் போராளிகளைத்தான் நாங்கள் கொல்கிறோம் என அமெரிக்க ராணுவம் கூறினாலும், தாக்குதலில் கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

ஐ.நா, ஆம்னஸ்டி உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலை கண்டித்துள்ளன. பாகிஸ்தானும்கூட, இத்தாக்குதல் தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீதான அத்துமீறல் எனக் கூறியுள்ளது.

அமெரிக்கா இப்பகுதியில் தனது கொள்கையை மறுபரிசீலனைச் செய்யவேண்டுமென பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாஸித் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் போராளிகளுக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்யும் என பாகிஸ்தான் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்க தாக்குதல்:20 பேர் மரணம்"

கருத்துரையிடுக