7 நவ., 2010

220க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை பிரிட்டீஷ் ராணுவம் சித்திரவதைச் செய்துள்ளது

லண்டன்,நவ.7:220க்கும் மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை பிரிட்டீஷ் ராணுவம் தொடர்ந்து சித்திரவதைக்கு ஆட்படுத்தியதாக பிரிட்டீஷ் வழக்கறிஞர்கள் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.

ஈராக்கியர்களுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் இதுத் தொடர்பான வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

ராணுவத்தின் அட்டூழியங்களைக் குறித்து விசாலமான விசாரணை தேவை என்ற கோரிக்கையை நிராகரித்த பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறை செயலர் லியாம் ஃபோக்ஸின் நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீட்டு விசாரணை நடக்கும் வேளையில்தான் வழக்கறிஞர்கள் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

ஆனால், விசாரணை நடத்துவதற்கு சிறப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2003 மார்ச் முதல் 2008 டிசம்பர் வரை ஈராக்கில் பிரிட்டீஷ் கட்டுப்பாட்டிலிலுள்ள சிறைகளில்தான் இந்த சித்திரவதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பாலியல் ரீதியான சித்திரவதைகள், உணவு,குடிநீர்,தூக்கம் மறுத்தல், நீண்டகாலம் தனிமைச் சிறையில் அடைத்தல், உடைகள் வழங்காமலிருத்தல், மரணத்தண்டனை விதிக்கப் போவதாக மிரட்டி நடித்தல் போன்ற சித்திரவதைகள் நடத்தப்பட்டுள்ளன.

பப்ளிக் இண்டரஸ்ட் லாயர்ஸ் க்ரூப் என்ற வழக்கறிஞர்கள் அமைப்புதான் இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த சில மாதங்களாக நூற்றுக்கணக்கான புகார்களை வழக்கறிஞர்கள் குழு பதிவுச் செய்துள்ளது.

நிரூபிக்கப்படாத இந்த குற்றச்சாட்டுக்களைக் குறித்து பொதுவான விசாரணையை விட தனிக்குழு விசாரிப்பதுதான் சிறந்தது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதைப் போன்ற குற்றச்சாட்டுகளில் இரண்டு பொதுவிசாரணை தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. 2003 செப்டம்பரில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கஸ்டடியில் 26 வயதான ஹோட்டல் தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவமும், பிரிட்டீஷ் ராணுவமுகாமில் ஹாமித் அல் சுவைதி என்ற 19 வயது இளைஞரும், இதர 19 ஈராக்கியர்களும் சட்டவிரோதமாக கொல்லப்பட்ட சம்பவமும் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "220க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை பிரிட்டீஷ் ராணுவம் சித்திரவதைச் செய்துள்ளது"

கருத்துரையிடுக