7 நவ., 2010

மனித உரிமை மீறல்:அமெரிக்காவிற்கு ஐ.நா கண்டனம்

ஐ.நா,நவ.7:சிறைக் கைதிகளை சித்திரவதைச் செய்வது, குவாண்டனாமோ சிறைக் கொட்டகையை மூடுவதற்கு தாமதம் செய்வது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை நிகழ்த்திவரும் அமெரிக்காவிற்கு ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க சிறைகளில் நடக்கும் சித்திரவதைகளைக் குறித்து வெள்ளைமாளிகை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.

குவாண்டனாமோ சிறைக் கொட்டகையையும், பக்ராம் சிறைச்சாலையையும் உடனடியாக மூடவேண்டும் என 47 உறுப்பு நாடுகளின் தூதர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் முறையாக ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறைகளில் நடைபெறும் சித்திரவதைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலியாவும், பிரிட்டனும் சிபாரிசுச் செய்துள்ளன.

ஆஃப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் நடத்தும் தாக்குதலை ஈரானின் பிரதிநிதி கண்டித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்ற பொழுது குவாண்டனாமோ சிறைக் கொட்டகையை மூடுவேன் என வாக்குறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற ஒபாமா தயாராகவேண்டும் என பிரான்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களின் உதவி இவ்விவகாரத்தில் நிர்பந்தமாகும் எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. சிவிலியன்களை கொலைச் செய்வதையும், போர்க் குற்றங்களையும் நிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகவேண்டும் என கியூபாவின் தூதர் தெரிவித்தார்.

விசாரணையின் போது சிறைக்கைதிகள் சித்திரவதைச் செய்யப்படுவதின் பொறுப்பு அமெரிக்காவிற்குத்தான் என வெனிசுலாவின் பிரதிநிதி தெரிவித்தார்.

அதேவேளையில் அரசியல் தூண்டுதலான உரையாடல்கள் மனித உரிமை கவுன்சிலில் நடப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மனித உரிமை மீறல்:அமெரிக்காவிற்கு ஐ.நா கண்டனம்"

கருத்துரையிடுக