ஸ்ரீநகர்,நவ.7:கஷ்மீர் பள்ளத்தாக்கில் சீக்கியர்கள் வசிக்கும் கிராமங்களில் சீருடை அணிந்த ஆயுதக் கும்பல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்து இறங்கியதால் அக்கிராம மக்கள் பீதியடைந்தனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வேளையில் சத்திசிங்தாரா என்ற கிராமத்தில் 35 சீக்கியர்கள் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம்போல் நடைபெறுமோ என்ற பீதியில்தான் அக்கிராம மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
சாதாரண வாகனங்களில் வருகைத் தந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்கள் வசிக்கும் ஹுட்முரா கிராமத்தில் வீடுகள் தோறும் ஏறி கதவை தட்டியுள்ளனர்.
அதேவேளையில், ஹுட்முரா கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்துதான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் ராணுவத்தினருக்கு எவ்வித தொடர்புமில்லை என அவர் தெரிவித்தார்.
வாகனங்களில் வந்திறங்கிய ஆயுதமேந்திய கும்பலைக் கண்டவுடன் சீக்கிய இளைஞர்கள் அமளியை ஏற்படுத்தி பக்கத்து வீடுகளில் வசிக்கும் முஸ்லிம்களையும் அழைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆயுதமேந்தியக் கும்பல் அக்கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டனர். வாகனத்தின் ஓட்டுநரை அக்கிராமமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரிக்கவேண்டுமென சீக்கிய சமூகங்கள் வலியுறுத்தியுள்ளன. அதே வேளையில், அடையாளம் தெரியாத பாதுகாப்பு படையினர்களுக்கெதிராக போலீஸ் வழக்குப் பதிவுச் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீரில் சீக்கியர்கள் கிராமங்களில் ஆயுதமேந்திய கும்பல்"
கருத்துரையிடுக