7 நவ., 2010

போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமாவின் வருகையை எதிர்த்து போராட்டம்

போபால்,நவ.7:போபால் விஷவாயு துயரச் சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான மக்கள் ஒபாமாவின் இந்தியா வருகையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

போபால் விஷவாயு விபத்தில் 25000க்கும் மேற்பட்ட மக்கள் மரணித்த பிறகும் ஒபாமாவும், அவருடைய முந்தைய ஆட்சியாளர்களும் ஏன் மவுனம் சாதிக்கின்றனர் என அமெரிக்க தூதரகம் வழியாக ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, போபால் விஷவாயு துயரச் சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தையும், அதன் முன்னாள் சேர்மன் வாரன் ஆண்டர்சனையும் ஒபாமாவும் பாதுகாத்து வருகிறார்.

விஷவாயு விபத்தின் பொறுப்பை எதிர்காலத்தில் யூனியன் கார்பைடு(தற்போதைய டோ கெமிக்கல்ஸ்) மேல் சுமத்துவது முடியாத நிலையிலும் 250 பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் இந்தியாவிற்கு ஒபாமா வருகைத் தந்ததன் நோக்கம் இந்தியாவின் சந்தையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகும் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செய்தி;தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமாவின் வருகையை எதிர்த்து போராட்டம்"

கருத்துரையிடுக