அங்காரா,நவ.1:துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மத்தியில் நடந்த குண்டுவெடிப்பில் 32 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் வெடிக்குண்டை கட்டிய நபர் தக்ஸிம் சதுக்கத்தில் தானாக வெடித்து சிதறி இத்தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
எவரும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால், குர்து இனத்தவருடனான இரண்டு மாத போர் நிறுத்தம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்துதான் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தக்ஸிம் சதுக்கத்தில் முகாமிட்டுள்ள போலீசாரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களில் ஒன்பது போலீசாரும் அடங்குவர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆறு சிவிலியன்களும் காயமடைந்துள்ளனர்.
தக்ஸிம் சதுக்கத்தில் சுதந்திர நினைவிடத்திற்கு அருகில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அடிக்கடி போராட்டம் நடைபெறும் இடமென்பதால் போலீசார் இங்கு நிரந்தரமாக முகாமிட்டுள்ளனர்.
குர்து பிரிவினை வாத இயக்கமான பி.கே.கே இத்தாக்குதலில் பின்னணியில் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே பி.கே.கே இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "துருக்கியில் குண்டுவெடிப்பு:32 பேருக்கு காயம்"
கருத்துரையிடுக