11 நவ., 2010

மத்தியபிரதேசம்:பா.ஜ.க ஆட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

போபால்,நவ.11:மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க வின் ஆறுவருட ஆட்சிக் காலத்தில் தற்கொலைச் செய்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 8,360 ஆகும்.
மத்திய பிரதேச மாநிலத்தை ஒளிரும் மாநிலம் என பா.ஜ.க ஆட்சியாளர்கள் புகழ்ந்துவரும் வேளையில்தான் இந்த அதிர்ச்சித்தரும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தற்கொலையில் இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்தை வகிக்கிறது மத்தியபிரதேச மாநிலம். நேசனல் க்ரைம் ரிக்கார்டு பீரோ இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

மத்தியபிரதேச பா.ஜ.க முதல்வர் சிவ்ராஜ் சவுகானின் ஆட்சிக் காலத்தில்தான் இவ்வளவு தற்கொலை மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பிற்குள்ளாகும் விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஏராளமான நலத்திட்டங்கள் இருந்தபொழுதிலும் கூட ஊழல் மற்றும் முறைகேடுகளால் உரியவர்களிடம் சென்று அடைவதில்லை.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடனில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 32 லட்சங்களாகும். இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடன் தொகையை விநியோகித்தாலே ஒவ்வொரு விவசாயிக்கும் 14.218 ரூபாய் வீதம் கிடைக்கும்.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கிகளுக்கு 50 சதவீத விவசாயிகள் கடனாளிகளாக உள்ளனர். இதில் 25 சதவீத பேர்களும் 2 அல்லது 3 ஹெக்டர் நிலத்திற்கு மட்டுமே சொந்தக்காரர்களாக உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையே மொரீனா, பிந்த்,சிவ்புரி, தாதியா ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைச் செய்ததை மாநில அரசே ஒப்புக்கொள்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் வறுமையும், கடனை திருப்பி அடைப்பதற்கான சிரமங்களும்தான் காரணம் என மாநில அரசு கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மாதமிருமுறை இதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்தியபிரதேசம்:பா.ஜ.க ஆட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை"

கருத்துரையிடுக