11 நவ., 2010

சிறுகடன் திட்டம் தற்கொலையை அதிகரிக்கச் செய்கிறது

ஹைதராபாத்,நவ.11:ஆந்திரபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சிறுகடன் உதவித்திட்ட நிறுவனங்களிலிருந்து (எம்.எஃப்.ஐ) கடன் வாங்கிய 24 பெண்மணிகள் தற்கொலைச் செய்துக் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

எம்.எஃப்.ஐக்கள் உருவாக்கும் துயரங்களின் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே இந்த தற்கொலைகள் என தொடர்புடையவர்கள் கூறுகின்றனர்.

ஆசியாவில் எம்.எஃப்.ஐக்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் 36 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையிலாகும். இந்தியாவில் மட்டும் 2 கோடி பேருக்கு இந்த நிறுவனங்கள் கடனுதவி வழங்குகின்றன.

மெக்ஸிக்கோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வசூலிக்கப்படும் 100 சதவீதத்திலிருந்து 125 சதவீதம் வட்டி விகிதத்தை ஒப்பிடுகையில் இது குறைவாகயிருந்தாலும் கூட வறுமையில் உழலும் மக்களை மேலும் வறுமையின் படுகுழியில் தள்ளவும், தற்கொலைகளுக்கு காரணமாகவும் மட்டுமே இந்த நிறுவனங்களால் கிடைத்த பலன் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனங்கள் கடுமையான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதோடு பெருமளவில் பெருகி வருகின்றன. தொடர்ந்து விளம்பரங்கள் கொடுப்பது மூலம் ஊடகங்களின் வாய்களை கட்டிப் போடுகின்றன இவை.

கடன் வாங்கிய 4000 ரூபாயை ஆந்திர மாநில கரீம் நகரைச் சார்ந்த பெண்மணியொருவர் அடைக்க முடியாததால் எம்.எஃப்.ஐ நிறுவனம் வாடகைக் குண்டர்களை அனுப்பி அவர் வசிக்கும் வசிக்கும் வீட்டை விற்குமாறு நிர்பந்தித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயன்ற பொழுதிலும் உயிர் பிழைத்துவிட்டார்.

எஸ்.கே.எஸ் என்றதொரு எம்.எஃப்.ஐ நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சி.இ.ஒ(முதன்மை செயல் அதிகாரி) சுரேஷ் குர்மானியின் வருடாந்திர சம்பளம் 1.5 கோடி ரூபாய் என எக்ணாமிக் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத் தவிர அவர் வருடாந்திர ஒருமுறை போனஸாக ஒரு கோடி ரூபாயும், 15 லட்சம் சிறப்பாக செயல்பட்டதற்கான போனஸும் பெற்றுள்ளார்.

20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கி பெட்டிக் கடைகளையோ அல்லது சிறு வியாபார ஸ்தாபனங்களையோ துவங்கும் கிராமவாசிகளுக்கு வாரந்தோறும் திருப்பியடைக்கும் தொகையைக்கூட ஈட்டுவதற்கு சாத்தியமில்லை என விவசாயம் மற்றும் கிராமப்புற முன்னேற்றத்திற்கான தேசிய வங்கி NABAARD-இன் எக்ஸிக்யூடிவ் இயக்குநர் பிரகாஷ் பக்‌ஷி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மாதமிருமுறை இதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறுகடன் திட்டம் தற்கொலையை அதிகரிக்கச் செய்கிறது"

கருத்துரையிடுக