11 நவ., 2010

கலீஃபா உமர்(ரலி..) யின் வாழ்க்கை வரலாறுக் குறித்த தொலைக்காட்சித் தொடர்

துபாய்,நவ.11:இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர்(ரலி...) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராக தயாராகிறது.

உமர்(ரலி...) அவர்களின் வாழ்க்கை, தனிப்பட்ட குணநலன்கள், வெற்றிகள் ஆகியவற்றை உள்ள்டக்கியதாக இந்த தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கப்படவிருக்கிறது.

இதுத்தொடர்பான ஒப்பந்தத்தை துபாயின் எம்.பி.சி குழுமம் கத்தர் நாட்டின் பப்ளிக் மீடியா குழுமத்துடன் செய்துள்ளது.

அடுத்த ரமலான் மாதத்தில் தொலைக்காட்சித் தொடரின் ஒளிபரப்பு துவங்கும். அரபி மொழியில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த தொடர் உருது, பாரசீக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் என எம்.பி.சி குழுமத்தின் தலைவர் ஷேக் வலீத் பின் ரஹ்மான், கத்தர் நாட்டு தொலைக்காட்சி தலைவர் முஹம்மது அப்துற்றஹ்மான் ஆகியோர் கூறினர்.

இந்த தொலைக்காட்சித் தொடர் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் ஒளிபரப்பாகும்.

நபி(ஸல்...) அவர்களின் மரணத்திற்கு பின்னால் கலீஃபா உமர்(ரலி...) அவர்களின் காலக்கட்டத்தில் இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றிகள், இஸ்லாம் பரவியது ஆகியவற்றை உட்கொண்ட இந்த தொலைக்காட்சித் தொடர் இஸ்லாமிய வரலாற்றை ஒளிவீசச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாத்தைக் குறித்த தவறான புரிந்துணர்வை நீக்குவதும் இந்த தொலைக்காட்சித் தொடரின் முக்கிய நோக்கமென ஷேக் வலீத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மாதமிருமுறை இதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கலீஃபா உமர்(ரலி..) யின் வாழ்க்கை வரலாறுக் குறித்த தொலைக்காட்சித் தொடர்"

கருத்துரையிடுக