3 நவ., 2010

நேட்டோவின் தாக்குதலில் 80 தலிபான்கள் பலி

காபூல்,நவ.3:பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள ஆஃப்கான் பகுதியில் நிலைகொண்டுள்ள நேட்டோ துருப்புகள் மீது தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த மோதல்களில் 80 போராளிகள் கொல்லப்பட்டதாக ஆஃப்கான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு மூலங்களின் ஊடாகக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் 80 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் போராளிகளின் உடல்கள் கிடப்பதாகவும் நாட்டின் கிழக்கு மாகாணமான பக்ரிகாவின் ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போராளிகளின் தாக்குதலுக்கான பதில் தாக்குதலில் 30 தலிபான்கள் கொல்லப்பட்டதாக முன்னதாக நேட்டோ தெரிவித்திருந்தது. அத்துடன்,கூட்டுப்படை வீரர்கள் ஐவர் இதில் காயமடைந்ததாகவும் அது கூறியிருந்தது. இம் மோதல்களின் போது விமானப்படையும் உதவிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் கூட்டுப்படையினர் பெருமளவான போராளிகளை விமானப்படைப் பிரிவே எதிர்கொண்டதாகவும் தெரிவித்திருந்தது.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நேட்டோவின் தாக்குதலில் 80 தலிபான்கள் பலி"

கருத்துரையிடுக