3 நவ., 2010

90,387 ஹுஜ்ஜாஜ்கள் சவூதி சேர்ந்தனர், 29 பேர் மரணம்

ஜித்தா,நவ.3:கடந்த அக்டோபர் 29ம் தேதியின் நிலவரப்படி, சுமார் 90,397 ஹுஜ்ஜாஜ்கள் 317 விமானங்கள் மூலம் சவுதி நாட்டை அடைந்துள்ளனர். அதில் 52,787 ஹுஜ்ஜாஜ்கள் மக்காவிலும், 37,610 ஹுஜ்ஜாஜ்கள் மதீனாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஹஜ் கமிட்டியின் தகவல்களின் படி, சுமார் 29 இந்தியர்கள் இப்பயணத்தின் போது உயிரிளந்துள்ளதாகவும், அதில் 25 பேர் ஹஜ் கமிட்டி மூலம் சென்றவர்களும், இதர 4 பேர் தனியார் ஹஜ் ஆபரேட்டர்கள் மூலம் சென்றவர்களாவர்.

இந்திய ஹஜ் கமிட்டி ஹுஜ்ஜாஜ்களுக்கு உதவுவதற்காக மக்காவில் தன் 24 மணிநேர சேவை மையத்தை அமைத்துள்ளது. இந்தியாவிலிருந்து இச்சேவை மையத்தை அணுக 009662-5496000/5448000 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "90,387 ஹுஜ்ஜாஜ்கள் சவூதி சேர்ந்தனர், 29 பேர் மரணம்"

கருத்துரையிடுக