ரங்கூன்,நவ.10:மியான்மரில் முதல்முறையாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற ஜனநாயக ரீதியிலான தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக ராணுவ ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் 440 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதி சபைக்கும், 224 உறுப்பினர்களைக் கொண்ட ஹவுஸ் ஆஃப் நேசனாலிட்டீஸ் சபைக்கும் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. இதில் 80 சதவீத இடங்களையும் கைப்பற்றியதாக ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியான யூனியன் சோலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(யு.எஸ்.டி.பி) அறிவித்துள்ளது.
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளதால் உண்மையான செய்திகள் கிடைக்கவில்லை.
"நாங்கள் 80 சதவீத இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளோம். இதனால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்" என முன்னாள் பிரதமர் தைன் ஷைனும் ராணுவ அதிகாரிகளும் இணைந்து உருவாக்கிய யு.எஸ்.டி.பி கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எல்லைப் பிரதேசங்களில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றுவருவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் நேற்று முன்தினம் 3 பேர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்தனர்.
சிறை வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூயின் கட்சியும் முக்கிய எதிர் கட்சியுமான நேசனல் லீக் ஃபார் டெமோக்ரஸி(என்.எல்.டி) தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு மியான்மரில் கடைசியாக தேர்தல் நடைப்பெற்றது. அத்தேர்தலில் ஆங்சான் சூயின் கட்சியான என்.எல்.டிக்கு பெரும்பான்மை கிடைத்த பொழுதிலும் ராணுவம் அதனை அங்கீகரிக்கவோ, ஆட்சியிலிருந்து விலகவோ செய்யவில்லை.
அரை நூற்றாண்டு காலமாக தொடரும் ராணுவ சர்வாதிகார ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான நாடகம்தான் இத்தேர்தல் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாராளுமன்றத்தின் சபைகளில் 25 சதவீத இடங்கள் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஆட்சியை நிலைநிறுத்த 26 சதவீத இடங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மியான்மர் தேர்தல்:80 சதவீத இடங்களில் வெற்றிப்பெற்றதாக ராணுவ ஆதரவாளர்கள்"
கருத்துரையிடுக