10 நவ., 2010

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் 1300 குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கிறது

வாஷிங்டன்,நவ.10:ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலமில் 1300 வீடுகளை நிர்மாணிக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.

குடியேற்ற நிர்மாணம் துவங்குவதற்கான இஸ்ரேலின் தீர்மானத்தைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ஃபலஸ்தீனுடனான சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்காக நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார்.

நெதன்யாகுவின் அறிவிப்பு நிராசையை ஏற்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்துள்ளார். நாளை நெதன்யாகுவுடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் இதனை அவரிடம் உணர்த்துவார் என தெரிகிறது.

1300 வீடுகள் மட்டுமல்லாமல் 800 குடியேற்ற நிர்மாண யூனிட்டுகளை ஸ்தாபிக்கவும் இஸ்ரேல் ஆலோசித்து வருகிறது.

ஃபலஸ்தீன் நாடு அங்கீகரிப்பதற்கான சர்வதேச நாடுகளின் தீர்மானத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியைத்தான் இஸ்ரேல் நடத்தி வருவதாக ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியேற்ற நிர்மாணம் தொடரும் என்ற இஸ்ரேலின் அறிவிப்பு அவர்களுக்கு சமாதானம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா ஆதரவுடன் துவங்கப்பட்ட அமைதிக்கான பேச்சுவார்த்தை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியேற்ற நிர்மாணம் மீண்டும் துவக்குவதற்கான நெதன்யாகுவின் தீர்மானத்தைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் 1300 குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கிறது"

கருத்துரையிடுக