4 நவ., 2010

ஹெட்லியிடமிருந்து பெற்ற விபரங்களை அமெரிக்கா இந்தியாவிடம் தரவில்லை: உள்துறை அமைச்சர்

டெல்லி,நவ.4:மும்பை தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்பே பல்வேறு தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து கொண்டது. ஆனால், ஹெட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்பே பல்வேறு தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து கொண்டது.

ஆனால்,அத்தகவலில் ஹெட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மும்பை தாக்குதலுக்கு பிறகும், முன்பும் முழுமையான ஆய்வை அமெரிக்கா அளித்தது.

ஹெட்லியின் பெயர், 2009-ம் ஆண்டு அக்டோபரில் தான் சில இடங்களில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

ஹெட்லியை பற்றி அமெரிக்க அதிகாரிகள் என்ன அறிந்திருக்கிறார்கள்? மும்பை தாக்குதலில் அவனுக்கு உள்ள பங்கு குறித்து அவர்கள் எப்போது தெரிந்து கொண்டார்கள்? என்பது போன்ற விபரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் முழுமையான ஆய்வில் உள்ளன.

அந்த ஆய்வு முடிந்ததும் இந்தியாவுடன் அந்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என கருதுகிறேன் என்றார்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் கூறும் அதேவேளையில் போலி என்கெளண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்துடன் தொடர்புடையவர் என ஹெட்லி முன்னர் தகவல் தந்ததாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹெட்லியிடமிருந்து பெற்ற விபரங்களை அமெரிக்கா இந்தியாவிடம் தரவில்லை: உள்துறை அமைச்சர்"

கருத்துரையிடுக