3 நவ., 2010

மக்கள் கவனத்தை ஈர்த்த எஸ்.டி.பி.ஐயின் ஜனஜாக்ரண யாத்ரா

கொல்கத்தா,நவ.3:சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மேற்குவங்காள மாநில பிரிவு நடத்திய ஜனஜாக்ரண யாத்ரா என்ற யாத்திரை வெற்றிகரமாக நிறைவுச் செய்யப்பட்டது.

மெட்ரோ சானலில் நடந்த பொதுக்கூட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் துவக்கி வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மேற்குவங்காள மாநில தலைவர் முஹம்மது ஷஹாபுத்தீன், எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தஈதுல் இஸ்லாம், தேசிய துணைத்தலைவர் ஸாஜித் ஹுசைன் சித்தீகி, தேசிய பொதுச்செயலாளர் உமர்கான், செயலாளர் மொய்தீன்குட்டி ஃபைஸி, மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அனீஸ்ஸுர் ரஹ்மான், மத்திய ஒருங்கிணைப்பாளர் சி.பி.முஹம்மது அலி, எம்.கே.அப்துந்நாஸர், மாநில செயற்குழு உறுப்பினர் மஸ்ஊதுல் இஸ்லாம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கடந்த மாதம் 22-ஆம் தேதி முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து இந்த யாத்திரை புறப்பட்டது. வடக்கு வங்காள யாத்திரைக்கு மாநிலத் தலைவரும், தெற்கு வங்காள யாத்திரைக்கு மாநில பொதுச் செயலாளரும் தலைமை தாங்கினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மக்கள் கவனத்தை ஈர்த்த எஸ்.டி.பி.ஐயின் ஜனஜாக்ரண யாத்ரா"

பெயரில்லா சொன்னது…

இந்த யாத்திரை எதற்கு என்று சொல்லவில்லை. இருந்தாலும் இந்தியாவின் விடிவெள்ளி தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து விட்டது (அல்ஹம்ந்துலில்லாஹ்) அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

கருத்துரையிடுக