3 நவ., 2010

கஷ்மீர்:மத்தியஸ்தர்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்

புதுடெல்லி,நவ.3:ஜம்மு கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களைக் குறித்து ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய கருத்தாய்வுக் குழுவினர் தங்களுடைய முதல் சுற்றுப்பயண அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அளித்தனர்.

அறிக்கையில் கஷ்மீர் பிரச்சனைக்குரிய பரிகார பரிந்துரைகளும் அடங்கியுள்ளன. ஆனால், அறிக்கையின் உள்ளடக்கத்தைக் குறித்து தெரிவிக்க மத்தியஸ்த குழுவின் தலைவரும், பத்திரிகையாளருமான திலீப் பட்கோங்கர் மறுத்துவிட்டார்.

தங்கள் வசம் மாந்தீரிக சூத்திரம் ஒன்றுமில்லை என்றும், தொடர்ந்து கஷ்மீர் அமைப்புகளை தொடர்புகொள்ள மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்தியஸ்த கருத்தாய்வுக் குழுவின் இரண்டாவது கஷ்மீர் பயணம் வருகிற இரண்டு வாரத்திற்குள் நடத்தப்படும் என பட்கோங்கர் தெரிவித்தார். அக்டோபர் 11 ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த குழுவின் இதர உறுப்பினர்கள் பேராசிரியர் ராதாகுமார், முன்னாள் தகவல் உரிமை கமிஷனர் எம்.எம்.அன்சாரி ஆகியோராவர்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இக்குழு தனது முதல் கஷ்மீர் சுற்றுப்பயணத்தை துவக்கியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:மத்தியஸ்தர்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்"

கருத்துரையிடுக