3 நவ., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்கள் - ஏ.டி.எஸ்

புதுடெல்லி,நவ.3:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்கள் என ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை தெளிவுபடக் கூறியுள்ளது.

அஜ்மீரில் கூடுதல் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் ஜகேந்திர குமார் ஜெயினிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட தேவேந்திரகுப்தா, லோகேஷ் சர்மா, சந்திரசேகர் லாவே, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் சத்தியேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

தேவேந்திரகுப்தா ஜார்கண்டிலும், லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே ஆகியோர் மத்தியப்பிரதேச மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரர்களாக செயல்பட்டுள்ளனர்.

சந்திரசேகர் லாவே மத்தியபிரதேச மாநிலத்தில் மாவட்ட சம்பர்க் பிரமுக்காக பணியாற்றியவர். குண்டுவெடிப்பிற்கு பிறகு மர்மமான முறையில் குண்டடிப்பட்டு கொல்லப்பட்ட சுனில் ஜோஷியும் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவராவார்.

குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ராஜஸ்தான் மாநிலம் குஜராத் சமாஜம் விருந்தினர் மாளிகையில் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் இந்திரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினராவார்.

தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்தத் தலைவர்கள் பலர் சிக்குவது இது முதல்முறையாகும். முன்னர் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், தயானந்த பாண்டே ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்ட பொழுதும் அப்பொழுது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு வெளியாகவில்லை.

சங்க்பரிவார அமைப்பான அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்கள் - ஏ.டி.எஸ்"

கருத்துரையிடுக