3 நவ., 2010

பார்சல் வெடிக்குண்டு:இப்ராஹீம் அசீரியை தேடும் வேட்டைத் துவங்கியது

சன்ஆ,நவ.3:அமெரிக்காவிற்கு செல்லவிருந்த கார்கோ விமானங்களில் வெடிப்பொருட்களை பார்சல்களாக அனுப்பிய வழக்கில் சந்தேககிக்கப்படும் சவூதி அரேபிய வம்சாவழியைச் சார்ந்த இப்ராஹீம் அல் அஸீரியைத் தேடும் வேட்டையை யெமன் ராணுவம் துவங்கியுள்ளது.

இந்த தேடுதல் வேட்டையில் உளவுத்துறையும் பங்கேற்கிறது. மஆரிப், ஸப்வா ஆகிய மாகாணங்களில் அசீரியை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

யெமனின் அல்காயிதா போராளி இயக்க தலைவராக கருதப்படும் நாஸர் அல் வஹய்ரி உள்ளிட்ட மூத்த அல்காயிதா போராளித் தலைவர்களுடன் அசீரி தலைமறைவாக உள்ளார் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

அசீரியை கண்டுபிடிப்பதற்கு யெமனின் மீது கடுமையான நிர்பந்தத்தை ஏற்படுத்தி வருகிறது அமெரிக்கா. கடுமையான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அமெரிக்க குடிமகன் அறிஞர் அன்வர் அவ்லாக்கிக்கு எதிரான வழக்கில் அவர் கைதுச் செய்யப்படாமலேயே யெமன் விசாரணையை துவக்கியுள்ளது.

வெளிநாட்டினரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டித்தான் அன்வர் அவ்லாக்கி மற்றும் இரண்டு நபர்களுக்கெதிராக விசாரணைத் துவங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒருவரை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டி ஹிஷாம் அஸ்ஸம் என்பருக்கெதிரான விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் அன்வர் அவ்லாக்கியின் மீதான வழக்கு.

19 வயதான ஹிஷாம் அஸ்ஸம் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ஆண்டு டெக்ஸாசில் ஃப்ரோட்வுட் ராணுவத்தளத்தில் கூட்டுக்கொலை நடத்திய மனநிலைப் பாதிக்கப்பட்ட ராணுவ வீரனுடன் அவ்லாக்கிக்கு தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் அமெரிக்க விமானத்தில் நைஜீரியாவைச் சார்ந்த நபர் ஒருவர் குண்டுவெடிப்பு நடத்த முயற்சிச் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திலும் டைம் சதுக்க குண்டுவெடிப்பு முயற்சியிலும் அவ்லாக்கியின் பெயர் விமர்சிக்கப்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பார்சல் வெடிக்குண்டு:இப்ராஹீம் அசீரியை தேடும் வேட்டைத் துவங்கியது"

கருத்துரையிடுக