9 நவ., 2010

இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மருந்து கொண்டுவர யுஏஇ தடை

துபாய்,நவ.9:இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மருந்து கொண்டுவர யுஏஇ தடை விதித்துள்ளது. யுஏஇ-ல் தடை செய்யப்பட்ட மருந்தை இந்திய பயணி ஒருவர் கொண்டுவந்ததையடுத்து இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யுஏஇ-ன் ஷார்ஜாவில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய சோதனையின்போது யுஏஇ-ல் தடை செய்யப்பட்ட மருந்தை கொண்டு வந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

இத்தனைக்கும் அவர் சில மருந்துகளை மட்டுமே தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் பெரிதாகிப் போனது. அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் பயணியின் பாஸ்போர்ட்டை காவல்துறையினர் தரவில்லை. மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இப்படி சாதாரண மருந்தைக் கொண்டு வந்ததற்காக பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார் அந்த அப்பாவி.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இந்த விவரம், இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்றான சென்னையில் இருப்பவருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வருவோர் எப்படி கவனமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும், மருந்துப் பொருட்களை கொண்டுவர விரும்புவோர் அதற்குரிய வழிமுறைகளை முன்கூட்டியே செய்து விடுவது நல்லது.

அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் அதாவது காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், வலிநிவாரணி(pain killer) மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்.

இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வது நன்று.
source:gulfnews, mail

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மருந்து கொண்டுவர யுஏஇ தடை"

கருத்துரையிடுக