8 நவ., 2010

பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்தியா பாராட்ட வேண்டும்: கிலானி

இஸ்லாமாபாத்.நவ.8:பாகிஸ்தான் மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்தியா பாராட்ட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

தீவிரவாத விவகாரத்திலிருந்து விலகி சமாதான பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்காக இரு நாடுகளும் செயல்படவேண்டும் என கிலானி தெரிவித்துள்ளார்.

கஷ்மீர் உள்ளிட்ட தற்போதைய பிரச்சனைகளையெல்லாம் சமாதானமான வழிகளில் பரிகாரம் காணவேண்டும். தெற்காசிய நாடுகளுடன் சமாதானமும், நல்லிணக்கமுமான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது.

தீவிரவாதமும், பயங்கரவாதமும் இந்தியாவையும், பாகிஸ்தானையும் மட்டும் பாதிக்கும் பிரச்சனைகள் அல்ல எனவும், தெற்காசிய நாடுகள் அனைத்தையும் பாதிப்பவையாகும் என கிலானி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்தியா சுற்றுப் பயணத்திற்கிடையேத்தான் பாகிஸ்தான் பிரதமரின் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவுடன் மிகுந்த நல்லுறவை பேணும் அமெரிக்காவிற்கு கஷ்மீர் விவகாரத்தில் பயன்தரத்தக்க வகையில் தலையிட பொறுப்புண்டு என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையே நல்ல உறவு நிலவ தடையாக இருப்பது கஷ்மீர் பிரச்சனையாகும். ஆதலால், இப்பகுதியில் சமாதானத்திற்கு கஷ்மீர் பிரச்சனைக்கு பரிகாரம் காண்பதே ஒரேவழி என்ற விஷயத்தில் ஒபாமா விழிப்புணர்வு பெற்றவர்தான் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ சேனலான பி.டிவியிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்தியா பாராட்ட வேண்டும்: கிலானி"

கருத்துரையிடுக