8 நவ., 2010

பி.எஸ்.எஃப் மற்றும் போலீசாருக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி,நவ.8:சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு உதவிச் செய்தார்கள் என பொய் வழக்கு போட்டு கிராமவாசிகளை சித்திரவதைச் செய்து, சிறுமிகள் உள்ளிட்ட பெண்களை மானபங்கப்படுத்திய புகார் மனுவில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆறுவாரத்திற்குள் உண்மையான அறிக்கையை சமர்ப்பிக்க பி.எஸ்.எஃப் ஜெனரல் மற்றும் காங்கர் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் கோரியுள்ளது கமிஷன்.

மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ராதாகாந்த் திரிபாதிதான் இந்த புகார் மனுவை அளித்தவர்.

கடந்த செப்டம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் பஞ்சாங்கி, ஆலோர் கிராமங்களில் ரெய்டு நடத்திய பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைக் குறித்த தகவல்களை அறிய கிராமவாசிகளை சித்திரவதைச் செய்துள்ளனர் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள், கிராமவாசிகளை தாக்கியதோடு, பெண்களையும் முகாம்களுக்கு கொண்டுசென்று மின்சார ஷாக் கொடுத்துள்ளனர். ஆறு மாணவிகளை கைதுச் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி மூன்று பி.எஸ்.எஃப் ஜவான்களும், இரண்டு போலீஸ்காரர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்டுகளுக்கு உதவினார்கள் என்ற குற்றத்தை சுமத்தி ஆறு பள்ளி மாணவிகளை பாதுகாப்பு படை கைதுச் செய்துள்ளது என திரிபாதி குற்றஞ்சாட்டுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாளா நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பி.எஸ்.எஃப் மற்றும் போலீசாருக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்"

கருத்துரையிடுக