8 நவ., 2010

ஆசியாவில் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன்.நவ.8:ஆசியாவில் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.

ஆஸ்திரேலியாவுடனான உறவு தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவிற்கு கூடுதலாக தலையிட உதவிகரமாக அமையும்.

கடல் கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், துயர்துடைப்பு பணிகள், ஸைபர் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா கூடுதல் கவனத்தை செலுத்தும்.

சீனாவில் எல்லை தகராறுகளில் நாங்கள் தலையிடமாட்டோம். இப்பகுதியில் கூடுதல் ராணுவ தளங்கள் அமைக்கப்படாது. ஏவுகணை எதிர்ப்புத்துறையில் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் அமெரிக்காவின் நோக்கமாகும்." இவ்வாறு கூறிய ராபர்ட் கேட்ஸிடம், தெற்கு சீனா கடற்பகுதியின் அனைத்து பாகங்களும் தங்களுடையது எனக் குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள வரைப்படத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, சீனாவுடன் மட்டும் உறவுக்கொள்ள நாங்கள் நோக்கமாகக் கொள்ளவில்லை எனவும், ஆசியாவில் வேறு நாடுகளும் உள்ளன எனவும் பதிலளித்தார் அவர்.

வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனும் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆசியாவில் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்"

கருத்துரையிடுக